கோலாலம்பூர், அக்டோபர்.31-
அமைச்சர் ங்கா கோர் மிங் தலைமையிலான வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு, ஊடகச் சுதந்திரத்தை எப்போதும் மதிக்கிறது என்றும், மக்களுக்கு துல்லியமான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதில் ஊடகங்களின் முக்கிய பங்களிப்பைப் பாராட்டுகிறது என்றும் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தாருங்கள் அல்லது "I LITE U " நிகழ்வை முன்னிட்டு நகர்ப்புற நிலைத்தன்மை, விளக்குப் புத்தாக்கத் திட்டத்தைத் தொடங்குவதவதற்காக நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பானது, கோலாலம்பூரில் உள்ள தனித்துவமிக்க சின்னங்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளைக் கவர வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டதாகும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு விளக்கம் அளித்தது.
மலாய் மொழியின் மாண்பை நிலைநிறுத்துவதற்கான உறுதிப்பாட்டின் அடையாளமாக, கோலாலம்பூர் மேயரின் உரை உட்பட அமைச்சர் ங்கா கோர் மிங் ஆகியோரின் பேச்சு மலாய் மொழியில் நடத்தப்பட்டது.
அந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் உள்ளூர் செய்தியாளர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களும் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்கப்பட்டது.
ஊடகவியலாளர்களின் கேள்விகளை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு மதிக்கிறது. அதே வேளையில் ஊடகவியலாளர்கள் கேட்கக்கூடிய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு தெளிவுபடுத்த விரும்புகிறது என்று அந்த அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








