நாட்டில் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள நட்மா ( NADMA ) எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனத்திற்கு 30 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இவ்வாண்டில் இறுதியில் ஏற்படக்கூடிய வெள்ளப் பேரிடரை சமாளிக்கவும், உரிய உதவிகள் செய்வதற்கும் இந்த மொத்த நிதியில் 10 கோடி வெள்ளி உடனடியகாக வழங்கப்படும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் 2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது பிரதமர் இதனை தெரிவித்தார்.
வெள்ளம் ஏற்படும் போது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். அந்த வகையில் வெள்ளிப் பேரிடர் தொடர்பான நிர்வாகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.








