May 27, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் விவகாரத்தை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்
தற்போதைய செய்திகள்

நஜீப் விவகாரத்தை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்

Share:

ஜன.2-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தன்னுடைய எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் கழிக்க வேண்டும் என்று கூடுதல் உத்தரவு ஒன்று அரசாணையில் இருப்பதாக கூறப்படும் விவகாரத்தை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர் Baljit Singh Sidhu கேட்டுக்கொண்டார்.

உண்மையிலேயே அரசாணை உத்தரவு உள்ளதா? இல்லையா? என்பதை அரசாங்கம் விளக்க அளிக்க வேண்டும் என்று பால்ஜிட் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தை அரசாங்கம் வெகுவிரைவில் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News