கோத்தா திங்கி, செப்டம்பர்.23-
மெர்சிங்கில் காரினுள் இறந்த நிலையில், மலாயன் வகைப் புலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அதனைக் கடத்த முயன்றதாக நம்பப்படும் இரு ஆடவர்கள் மீது கோத்தா திங்கி அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
28 வயது மற்றும் 49 வயதுடைய அவ்விரு ஆடவர்களும் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி, மெர்சிங் ஃபெல்டா தெங்காரொவில் இக்குற்றத்தைப் புரிந்தனர் என்று அக்குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010 (சட்டம் 716), பிரிவு 70 இன் கீழ், முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனத்தைக் கடத்தியதற்காக ஜோகூர் வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.








