Nov 1, 2025
Thisaigal NewsYouTube
முதலாவது மாடியிலிருந்து மாணவி கீழே விழுந்து காயம்
தற்போதைய செய்திகள்

முதலாவது மாடியிலிருந்து மாணவி கீழே விழுந்து காயம்

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.31-

காதல் தோல்வி என்று நம்பப்படும் மாணவி ஒருவர் ஷா ஆலாமில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியின் முதலாவது மாடியிலிருந்து கீழே விழுந்து காயத்திற்கு ஆளானார்.

பாதிக்கப்பட்ட மாணவி, ஒன்றாம் படிவத்தைச் சேர்ந்தவர் என்று ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் காயமுற்ற மாணவி தற்போது ஷா ஆலாம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நெற்றி மற்றும் கால்களில் காயமுற்ற அந்த மாணவியின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஏசிபி முகமட் இக்பால் தெரிவித்தார்.

Related News