இஸ்கண்டார் புத்ரி, நவம்பர்.05-
ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, தாமான் புக்கிட் இண்டாவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 11.47 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன், போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹாமான் அர்சாட் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் அந்த வீட்டை போதைப் பொருள் கிடங்காகப் பயன்படுத்தி வந்த 55 வயது நபர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து போலீசார் நடத்திய உளவு நடவடிக்கையின் விளைவாக கடந்த திங்கட்கிழமை அந்த வீட்டில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது 115.09 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ரஹாமான் அர்சாட் இதனைத் தெரிவித்தார்.








