Sep 25, 2026
Thisaigal NewsYouTube
புதிய கட்சி பெயர் மாற்றம் மட்டுமே கண்டதாக ஹம்சா ஜைனுதின் தகவல்
தற்போதைய செய்திகள்

புதிய கட்சி பெயர் மாற்றம் மட்டுமே கண்டதாக ஹம்சா ஜைனுதின் தகவல்

Share:

தனது புதிய கட்சியான பார்ட்டி வாவாசான் நெகாரா வெறும் பெயர் மாற்றத்திற்கு மட்டுமே உட்பட்டுள்ளதால், அதன் சட்டப்பூர்வத் தன்மை குறித்த கேள்விகள் எழக்கூடாது என்று அக்கட்சியின் தலைவரும், லாருட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார்.

தாம் ஏற்கனவே உள்ள கட்சி ஒன்றிற்குப் பொறுப்பேற்று அதன் பெயரை மட்டுமே மாற்றியுள்ளதாக நேற்று இரவு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு ஹம்சா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 13-ஆம் தேதி வாவாசான் கட்சியைத் தொடங்கியதாக அறிவித்த அவர், அப்பெயரை பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பார்ட்டி வாவாசான் நெகாரா என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை அமைப்பதற்கான எந்த ஓர் அதிகாரப்பூர்வ விண்ணப்பமும் இதுவரை கிடைக்கவில்லை என்று சங்கங்களின் பதவிலாகாவான ஆர்.ஓ.எஸ் தலைமை இயக்குநர் சுல்ஃபிகார் அகமது நேற்று வெளியிட்ட அறிவிப்பினையடுத்து, ஹம்சா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related News