Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பக்காத்தான் ஹராப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை
தற்போதைய செய்திகள்

பக்காத்தான் ஹராப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை

Share:

பினாங்கு மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பினாங்கு பெரிக்காத்தான் நேஷனல் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற்ற பினாங்கு சட்டமன்ற​த் தேர்தலில் வெற்றி பெற்ற 40 சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை செவ்வாய்க்கிழமை காலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்கொள்ளவிருக்கின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் இன்னமும் விவாதித்துக்கொண்டு இருப்பதாக பாஸ் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் 40 சட்டமன்றத் தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் 11 தொகு​திகளை கைப்பற்றியது.

Related News