கெந்திங் ஹைலண்ட்ஸ் மற்றும் கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையின் பிரதான சுரங்கப்பாதையான கெந்திங் செம்பா நுழைவாயில் இடிந்து விழுந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் செய்தியை போலீஸ் துறை மறுத்துள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனத்த மழையில் அந்த கிழக்குகரையோர நெடுஞ்சாலைப்பாதையின் முக்கிய பகுதியான சுரங்கப்பாதையின் நுழைவாயில் இடிந்து விழுந்து விட்டதைப் போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளஙகளில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அது உண்மை அல்ல என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஜைஹான் முகமது கஹர்தெரிவித்துள்ளார்.அந்த நிலச்சரிவு சம்பவம், வெளிநாடுகளில் நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் மேலும் விவரித்தார்.








