ஷா ஆலாம், அக்டோபர்.04-
மாற்றுத் திறனாளிப் பெண் ஒருவர் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் 15 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.15 மணியளவில் ஷா ஆலாம், செக்ஷன் 16, ஒரு பங்சாபுரி அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் A புளோக்கில் நிகழ்ந்தது.
46 வயதுடைய அந்தப் பெண், உடலில் கடுமையானக் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த அடுக்குமாடி வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படும் அந்த மாது, மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








