Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய போலீஸ்படைக்கு விரிவான சட்டம் தேவை
தற்போதைய செய்திகள்

மலேசிய போலீஸ்படைக்கு விரிவான சட்டம் தேவை

Share:

கோலாலம்பூர், ஜுலை 13-

இணைய பகடிவதை பிரச்சனைகளை திறம்பட ஒடுக்க இன்னும் ஆழமான, விரிவான சட்டம் அரச மலேசிய போலீஸ் படைக்கு தேவைப்படுகிறது.

அப்பிரச்சனைகளை கையாள வெவ்வேறு சட்டங்களை PDRM சார்ந்திருப்பதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

எடுத்துக்காட்டாக இணைய மிரட்டல் தொடர்பான விசாரணைகளுக்கு குற்றவியல் சட்டத்தையும், இணையத்தில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஒருவரை சிறுமைப்படுத்தும் விசாரணைகளுக்கு 1998 தொடர்பு பல்லூடக சட்டம் பயன்படுத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் இணைய பகடிவதையால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டு பின்னர் உயிரை மாய்த்துக் கொண்ட Esha எனும் TIKTOK INFLUENCER-ரின் மரணத்தை அடுத்து PDRM-மையும், MCMC-யையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அது குறித்து தொடர்பு அமைச்சர் FAHMI FADZIL-லுடன் பேச்சு நடத்தப்படும் என டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்