Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலுக்கு அன்வார் கடும் கண்டனம்: போரை நிறுத்தும்படி வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலுக்கு அன்வார் கடும் கண்டனம்: போரை நிறுத்தும்படி வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், மார்ச்.02-

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலுக்கு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்திற்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்தாக்குதலானது சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான விதிமுறை மீறல் என்றும் அன்வார் சாடினார்.

அமெரிக்கா மற்றும் சியோனிச ஆட்சியின், ஈரான் மீதான தாக்குதலை, மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு என்று குறிப்பிட்டுள்ள அன்வார், அவர்களுடன் என்ன வேறுபாடுகள் இருந்தாலும், நடத்தப்பட்ட தாக்குதலானது சர்வதேச ஒழுங்கமைப்பிற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர நாடான மலேசியா, உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகள் அனைத்தும் ஆக்கபூர்வமான முறையில் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும் மாறாக அவை போராக உருமாறக் கூடாது என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் நடந்த 12 நாட்கள் தொடர் வான் வழித் தாக்குதலுக்குப் பிறகு, கடந்த சனிக்கிழமை மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் ஈரானின் மூத்த தலைவர் Ayatollah Ali Khamenei கொல்லப்பட்டதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு தேசிய ஊடகங்கள் உறுதிப்படுத்தின.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு