Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பேரா மாநில மூத்த போலீஸ் அதிகாரிகளின் பதவியேற்பு விழா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேரா மாநில மூத்த போலீஸ் அதிகாரிகளின் பதவியேற்பு விழா

ஈப்போ, ஜூன்.04-

பேரா மாநில மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கான தரவரிசை நிலையிலான பதவியேற்புச் சடங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் முன்னிலையில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் முதல் ஏஎஸ்பி எனப்படும் உதவி சீனியர் போலீஸ் அதிகாரிகள் வரை பதவி உயர்வுப் பயிற்சியின் முடிவுகளின்படி, 2023 ஆம் ஆண்டுக்கான திறன் அடிப்படையிலான பதவி உயர்வு வழங்கப்பட்டது.

Noor Fadzly Ahmad, Mohd Redha Pahlawi Abdul Malek, Zulkifli Ariffin, Hairuddin Hassan, Irma Afzaniza Ismail, யுவராஜா கணபதி, தேவேந்திர ராமன் ஜூலூ, Syed Khalis Syed Darus, Mohd Faidullah Siddek, சுந்தர் சேகரன், Chua Ping Thing, ஜெயன் சுப்ரமணியம், Mohd Zafril Kamarozaman மற்றும் வேலம்மால் கண்ணப்பன் ஆகியோர் ஏஎஸ்பி, பதவி உயர்வு பெற்றவர்களில் அடங்குவர்.

இவ்விழாவில் ஏசிபி Shafa'aton Abu Bakar, பேராக் போலீஸ் மேலாண்மைத் துறைத் தலைவர், ஏசிபி Lee King Chuan, போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர், ஏசிபி Amir Hussin, நேர்மை நெறிமுறை பிரிவு தலைவர் ஏசிபி டத்தின் ஶ்ரீ Halimahton Ahmad, குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் துணைத் தலைவர் Supt. Sahimi Husin, போக்குவரத்து போலீஸ் புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர், Supt. Mohamad Sukardy Rangkut உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின், பதவி உயர்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகளுக்குத் தனது வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை