Jun 28, 2026
Thisaigal NewsYouTube
மின்னணுக் கழிவுகள் இறக்குமதிக்கு இன்று முதல் முழுமையான தடை
தற்போதைய செய்திகள்

மின்னணுக் கழிவுகள் இறக்குமதிக்கு இன்று முதல் முழுமையான தடை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.04-

மலேசியச் சுங்கத் துறையின் "முழுமையான தடை" உத்தரவைத் தொடர்ந்து, இன்று முதல் மின்னணுக் கழிவுகளை நாட்டிற்குள் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் மின்னணுக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பணிக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

மின்னணுக் கழிவுகள் இனி நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படாது. இது அனைத்து ஏஜென்சிகளையும் உள்ளடக்கிய கடுமையான அமலாக்கத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அஸாம் பாக்கி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News