Oct 10, 2026
Thisaigal NewsYouTube

உணர்ச்சிகரமான விவகாரங்களுடன் விளையாடாதீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உணர்ச்சிகரமான விவகாரங்களுடன் விளையாடாதீர்

கோலாலம்பூர், மே.30-

உணர்ச்சிகரமான விவகாரங்களை எழுப்பி நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹான்னா இயோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமயத்தை முன்நிறுத்தி, அவதூறான தகவல்களைப் பரப்பி வரும் தரப்பினர் தங்கள் செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசியா பல்லின மற்றும் பல சமயத்சைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்ற ஒரு நாடாகும். அவதூறு தன்மையில் சமயம் சார்ந்த விவகாரங்களை எழுப்பும் தரப்பினர், மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தம்முடைய பிகமிங் ஹான்னா: ஏ பெர்சனல் ஜேர்னி என்ற நூலைச் சமயத்துடன் தொடர்புப்படுத்தி, அவதூறு தன்மையில் பேசிய தரப்பினருக்கு எதிராக சிகாம்புட் எம்.பி.யான ஹான்னா இயோ தொடுத்திருந்த வழக்கில் அந்த பெண் எம்.பி. இன்று வெற்றி பெற்றது குறித்து கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்

அந்த நூல் தொடர்பாக ஹான்னா இயோவிற்கு எதிராக அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் வட மலேசிய பல்கலைக்கழக முதிர் நிலை விரிவுரையாளர் டாக்டர் கமாருல் ஸாமான் யுசோப் என்பவர் இழப்பீட்டுத் தொகையாக 4 லட்சம் ரிங்கிட்டையும், வழக்கு செலவுத் தொகையாக 80 ஆயிரம் ரிங்கிட்டையும் வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அந்த நூல் மூலம் ஹன்னா இயோ மலேசியாவை ஒரு கிறிஸ்துவ நாடாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார் என்று அந்த விரிவுரையாளர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ஹன்னா இயோ, அவதூறு வழக்கு தொடுத்து இருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை