Sep 22, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் மீது 32 குற்றச்சாட்டுகள்
தற்போதைய செய்திகள்

ஆடவர் மீது 32 குற்றச்சாட்டுகள்

Share:

கடந்த மூன்று ஆண்டு காலமாக 16 வயதுடைய தமது வளர்ப்பு மகளை, பாலியல் பலாத்காரம் புரிந்து, பல்வேறு பாலியல் சித்ரவதைகளைச் செய்து வந்ததாக ஆடவர் ஒருவர் இன்று மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுள்ளார்.

32 வயதுடைய அந்த நபருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள 32 குற்றச்சாட்டுகளை அந்நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இரு வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபருக்கு எதிராக தண்டனை அளிப்பதற்கு முன்னதாக வழக்கின் தன்மைகளை ஆராய்வதற்கு ஏதுவாக இவ்வழக்கு விசாரணை வரும் மே 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 32 குற்றச்சாட்டுகள் அடிப்படையில் பிரம்படி தண்டனையுடன் 830 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அந்த ஆடவரின் மனைவியும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருமான 40 வயது மாது, பிராசிகியூஷன் சாட்சியாக மாறியதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்