May 5, 2026
Thisaigal NewsYouTube
சாரா (SARA) நிதியுதவித் திட்டம்: சுமூகமான விநியோகத்தை உறுதிச் செய்ய அரசு உறுதி
தற்போதைய செய்திகள்

சாரா (SARA) நிதியுதவித் திட்டம்: சுமூகமான விநியோகத்தை உறுதிச் செய்ய அரசு உறுதி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

நாளை முதல் தொடங்கவுள்ள 'சாரா' நிதியுதவி விநியோகம் எந்தவிதத் தடங்கலும் இன்றி நடைபெறுவதை உறுதிச் செய்ய அதன் தொழில்நுட்பக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில், தரவுத்தளத்தின் வேகமும் கொள்ளளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட 2.2 கோடி மலேசியர்கள் தலா 100 ரிங்கிட் நிதியுதவியைப் பெறுவார்கள் என்றும், இதற்காக 220 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தொகையானது தகுதியுள்ளவர்களின் அடையாள அட்டையான மைகாட்டில் தானாகவே வரவு வைக்கப்படும் என்பதால், பொதுமக்கள் இதற்கெனத் தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

Related News