Aug 12, 2026
Thisaigal NewsYouTube
மாணவனுடன் பாலியல் சேட்டை, சமய ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மாணவனுடன் பாலியல் சேட்டை, சமய ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

Share:

மலாக்கா, மே.30-

15 வயது மாணவனிடம் பாலியல் சேட்டைப் புரிந்ததாக இஸ்லாமிய சமயப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

மலாக்கா, ஜாசினில் உள்ள அந்த சமயப்பள்ளியின் வார்டன் அறையில் 38 வயதுடைய ஐஸாட் அஸ்னி என்ற அந்த ஆசிரியர், இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மே 23 ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் குற்றத்தை மறுத்து அந்த ஆசிரியர் விசாரணை கோரியுள்ளார். விசாரணை முடியும் வரையில் அந்த நபரை 9 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிபதி ரொஹாதுல் அக்மார் அப்துல்லா அனுமதித்தார்.

Related News