Sep 27, 2026
Thisaigal NewsYouTube
எதிர்கட்சித் தலைவர் பதவி காலியிடம் குறித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது
தற்போதைய செய்திகள்

எதிர்கட்சித் தலைவர் பதவி காலியிடம் குறித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது

Share:

எதிர்க்கட்சித் தலைவரான ஹம்சா ஜைனுடின் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த பதவி காலியாக இருப்பதை அறிவிக்கும் அதிகாரப்பூர்வக் கடிதமானது நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெரிகாத்தான் நேஷனல் தலைவர் அகமட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.

இன்றோ அல்லது நாளையோ அக்கடிதமானது நாடாளுமன்றத்தில் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இன்று வெள்ளிக்கிழமை திரங்காணு மாநில பாஸ் கட்சி ஏற்பாட்டில் நடைபெற்ற ஹரி ராயா திறந்த இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகமட் சம்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பதவிக்காக பல தரப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதையும் அகமட் சம்சூரி சுட்டிக் காட்டியுள்ளார்.

அந்த விண்ணப்பங்களை தாங்கள் மதிப்பாய்வு செய்து வருவதாகவும், அவற்றின் அமைப்பு மற்றும் சமர்ப்பிப்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ள கூடுதல் விவரங்களையும் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, பின்னர் உயர் மட்ட தலைமைக்குழு கூட்டத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்