புத்ராஜெயா, செப்டம்பர்.23-
சாரா உதவித் தொகையைப் பெறுவதில் தொலைந்து போன மைகாட் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதுவரை கிட்டதட்ட 100 தொலைந்து போன மைகாட்கள் மூலம் முறைகேடுகள் நடந்துள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைகாட்கள் ஒருமுறை தொலைந்து போனதாகவோ அல்லது திருடப்பட்டதாகவோ புகார் அளிக்கப்பட்டவுடன், உடனடியாக அவை செயலிழக்கச் செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ள சைஃபுடின், அவை அவ்வாறு செயலிழக்கச் செய்யப்படவில்லை என்றால் அவற்றை மீண்டும் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதை உறுதிப்படுத்தினார்.
அதிகாரிகள் இம்முறைகேடுகள் குறித்து உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








