Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சிங்கப்பூர் பிரஜை உயிரிழந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிங்கப்பூர் பிரஜை உயிரிழந்தார்

டிச.10-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 49.5 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர் கூலாயிக்கு அருகில் நிகழ்ந்த விபத்தில் அதிகவேக சக்தியைக்கொண்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த சிங்கப்பூர் பிரஜை ஒருவர் உயிரிழந்ததுடன், அந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய மற்றொரு நபர் கடும் காயங்களுக்கு ஆளானார்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணியளவில் நிகழ்ந்தது. மோட்டர் சைக்கிளில் பின்இருக்கையில் அமர்ந்து சென்ற ஒரு சிங்கப்பூர் பிரஜையான 21 வயது பெண் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

23 வயது நபர் செலுத்திய Kawasaki Ninja ரக மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலைத்தடுப்பில் மோதி கீழே விழுந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்ற கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Tan Seng Lee தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →