98 நாள் மகப்பேறு விடுப்பு விதிமுறையை அமல்படுத்தாத முதலாளிகள் தொடர்பாக 44 புகார்கள் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை மனிதவள அமைச்சு பெற்றுள்ளது.
மொத்த புகார்களில் 28 புகார்கள் ஆதாரபூர்வமானவை என்றும் மீதமுள்ள 16 புகார்கள் ஆதாரமற்றவை என்றும் அதன் துணை அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் கூறினார்.
“ஆதாரமுள்ள புகார்களுக்குச் சம்பந்தப்பட்ட முதலாளிக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, சீர்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“அனைத்து வழக்குகளும் பணியாளருக்கு 98 நாள் மகப்பேறு விடுப்பு உரிமையை வழங்குவதற்கான முதலாளியின் இணக்கத்தின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மக்களவையில் 98 நாள் மகப்பேறு விடுப்பு கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தற்போதைய செய்திகள்
மகப்பேறு 98 நாள் விடுப்பு விதியை அமல்படுத்தாத முதலாளிகள் தொடர்பாகப் புகார்கள்
Related News

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

கூலிமில் கோர விபத்து... 75 வயது முதியவர் பலி, 3 பேர் காயம்

கோலாலம்பூரில் ஆயுதயேந்திய கொள்ளை... 2 பருவ வயது பெண்கள் உட்பட 7 பேர் கைது


