ஷா ஆலாம், நவம்பர்.27-
கிள்ளான், கம்போங் ஜாவா நிலக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 19 இந்தியக் குடும்பங்கள், தங்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
WCE எனப்படும் தைப்பிங்கையும், பந்திங்கையும் இணைக்கும் மேற்குக் கரையோர விரைவுச் சாலை நிர்மாணிப்புத் திட்டத்திற்கு வழிவிடும் வகையில் 19 குடும்பங்களும் தங்கள் வீடுகளை உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என்று ஷா ஆலம் உயர் நீதிமன்றம் உத்ததரவிட்டுள்ளதாக குடியிருயிருப்பாளர்களின் வழக்கறிஞர் ஆர். கெங்காதாரன் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்று கோரி, கிள்ளான் நில அலுவலகமும், WCE SDN. Bhd. நிறுவனத்தின் பங்குதாரரும் தாக்கல் செய்த வழக்கு மனுவிற்கு உயர் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








