கோலாலம்பூர், அக்டோபர்.30-
கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இதுவரை 6,000-க்கும் அதிகமான இணைய மோசடி தொடர்பான உள்ளடக்கங்கள் மற்றும் விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் பிரிவு இயக்குநர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்துள்ளார்.
PSRC என்ற போலீஸ் சைபர் குற்றங்களுக்கு எதிரான அமைப்பு அளித்த கோரிக்கையின் பேரில் இந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
PSRC அமைப்பானது மோசடி தொடர்பான உள்ளடக்கங்களையும் விளம்பரங்களையும் தினமும் 24 மணி நேரமும் கண்காணித்து வருகவதாகவும் ருஸ்டி முகமட் தெரிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 6,184 மோசடி உள்ளடக்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள அவர், அவை மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் நீக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.








