கோலாலம்பூர், செப்டம்பர்.07-
கோலாலம்பூரில் உள்ள பிரபல நட்சத்திரத் தங்கும் விடுதி ஒன்று விபச்சார விடுதியாக மாறிய திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த இரண்டு வாரங்களாக இரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு வந்த இந்தத் தங்கும் விடுதியில் மலேசிய குடிநுழைவுத் துறையால் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், 37 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் 17 இந்தோனேசியப் பெண்கள், 9 தாய்லாந்து பெண்கள், 6 வியட்நாமிய பெண்கள் ஆகியோர் அடங்குவர். கைதானவர்கள் சுற்றுலா விசாவில் வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த மோசடிக் கும்பல் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இயங்கி வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.








