எம். குலசேகரரன் குற்றச்சாட்டு
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மின் விசாரணைக்கு ஆளாகியதைத் தொடர்ந்து மனித வள அமைச்சிலிருந்து நீக்கப்பட்ட ஐவரில் ஒருவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு முறைகேட்டினால் அதே பொறுப்பிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் ஆவர் என்று முன்னாள் மனித வள அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.
அந்த நபர் அரசியல் நியமனத்தின் வாயிலாக அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர் என்றும் கடந்த 2008 ஆம் ஆண்டில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தம்முடைய அலுவலகத்தில் பணி புரிந்தவர் என்றும் குலசேகரன் குறிப்பிட்டார்.
முறைகேடு புரிந்தார் என்பதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நபர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது தம்முடைய அரசியல் செயலாளராக இருந்த மனித வள அமைச்சர் வி. சிவகுமாருக்கு, அந்த நபர் எதற்காக தமது அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டார் என்பது நன்கு தெரியும். அப்படி நீக்கப்பட்ட நபர்தான் 15 ஆண்டுகளுக்கு பிறகு மனித வள அமைச்சர் சிவகுமாரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நீக்கப்பட்ட நபரை எவ்வாறு மறுபடியும் சிறப்பு அதிகாரியாக நியமித்திருக்கிறீர்கள், இது தவறான செயல் என்பதை அமைச்சர் சிவகுமாரிடம் தாம் சுட்டிக்காட்டியதாகவும் ஈப்போ பாராட் எம்.பி.யான குலசேகரன் தெரிவித்தார்.








