Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வியட்நாம் பெண், 24 ஆவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வியட்நாம் பெண், 24 ஆவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

கோலாலம்பூர், நவ. 18-


வியட்நாம் பிரஜையான பெண் ஒருவர் 24 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று காலை 6.53 மணியளவில் கோலாலம்பூர், புக்கிட் ஜாலில், ஜாலான் ஜாலில் 2, பரைசோ ரெசிடென்ஸி கட்டடத்தில் நிகழ்ந்தது.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் அவ்விடத்திற்கு விரைந்த போது 30 வயது மதிக்கத்தக்க மாது ஒருவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

24 ஆவது மாடியிலிருந்து விழுந்த அந்தப் பெண்ணின் உடல் 7 ஆவது மாடியில் கிடந்தது. சவப்பரிசோதனைக்காக அப்பெண்ணின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →