கோலாலம்பூர், செப்டம்பர்.07-
மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்த இந்தோனேசியத் தொழிலாளர்கள் தற்போது மலேசியாவை விட்டு வெளியேறுகின்றனர். மலேசியாவுக்கான இந்தோனேசியத் தூதர் டத்தோ ஹெர்மோனோ வெளியிட்ட திடுக்கிடும் தகவலின்படி, கடந்த ஆண்டு 591 ஆயிரமாக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது 543 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
மலேசியாவை விட ஜப்பான், தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிக ஊதியம் கிடைப்பதால், இந்தோனேசியர்கள் அங்கு படையெடுக்கின்றனர். இதன் காரணமாக, மலேசியாவுக்குப் புதிய தொழிலாளர்களை அனுப்புவதில் இந்தோனேசியா ஆர்வம் காட்டவில்லை. எதிர்காலத்தில் இந்தோனேசியத் தொழிலாளர்கள் மலேசியாவுக்கு வருவது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








