நியூயார்க், செப்டம்பர்.26-
மலேசியா கடந்த 2024-ஆம் ஆண்டு முதல், பாலஸ்தீனத்திற்கு 70 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமாக நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை ஐநா. பொதுச் சபையின் 80-வது அமர்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற பாலஸ்தீன அகதிகள் குறித்த அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய முகமட் ஹசான், பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான அறக்கட்டளை நிதியத்தின் மூலம் இந்நிதி வழங்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
பாலஸ்தீன மக்களை மலேசியா தொடர்ந்து ஆதரித்து வருவதைக் குறிக்கும் விதமாக, கூடுதலாக 105 மில்லியன் நிதியை மலேசியா வழங்கப் போவதையும் முகமட் ஹசான் அக்கூட்டத்தில் அறிவித்துள்ளார்.








