குளுவாங், டிசம்பர்.09-
அம்புலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். மேலும் 3 மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஒரு நோயாளி படுகாயத்திற்கு ஆளாகினர்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.10 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 59.8 ஆவது கிலோமீட்டரில் தெற்கை நோக்கி குளுவாங் அருகில் நிகழ்ந்தது.
சிகமாட் மருத்துவமனையைச் சேர்ந்த அம்புலன்ஸ் வண்டி, சாலையை விட்டு விலகி, தடம்புரண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் அம்புலன்ஸ் வண்டியிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட அதன் ஓட்டுநர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இரண்டு பெண் மருத்துவ உதவியாளர்கள், ஒரு ஆண் மருத்துவ உதவியாளர் மற்றும் ஒரு பெண் நோயாளி ஆகியோர் படுகாயத்திற்கு ஆளானதாக ரெங்காம் தீயணைப்பு, மீட்பு நிலைய அதிகாரி M. Nasir A. Shah தெரிவித்தார்.








