Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கார் டயர் வெடித்து விபத்து: 10 மாதக் குழந்தை கவலைக்கிடம்
தற்போதைய செய்திகள்

கார் டயர் வெடித்து விபத்து: 10 மாதக் குழந்தை கவலைக்கிடம்

Share:

பத்து பஹாட், பிப்ரவரி.28-

கார் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானதில், 10 மாத பெண் குழந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜோகூர், பத்து பஹாட், துன் உசேன் ஓன் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இந்த விபத்து நிகழ்ந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார்.

காரின் டயர் திடீரென வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்திலிருந்த கான்கிரீட் தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காரை ஓட்டிச் சென்ற 26 வயது தந்தை மற்றும் 41 வயது தாயார் ஆகிய இருவரும் கைகளில் காயங்களுடன் சீரான நிலையில் உள்ளனர்.

காரில் இருந்த அவர்களின் 10 மாதக் குழந்தை தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகக் போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு