கோல பிலா, ஆகஸ்ட்.16-
இன்று காலையில் கோல பிலா, ஶ்ரீ மெனாந்தி, உலு பெண்டுல், குனுங் அங்சியில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்ததில் மூன்று கார்கள் சேதமுற்றன.
இச்சம்பவம் தொடர்பாக காலை 11.05 மணியளவில் தீயணைப்பு, மீட்புப் படையினர் அவசர அழைப்பைப் பெற்றதாக அதன் கமாண்டர் நோர்ஹிர்வான் ஸைனால் தெரிவித்தார்.
இதில் இரண்டு புரோட்டோன் சாகா கார்களும், ஒரு பெரோடுவா அத்திவா காரும் சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார். தவிர மரம் விழுந்த போது மின்சார கேபள் கம்பியும் சாய்ந்ததால் மேலும் 7 வாகனங்கள் சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.








