Sep 27, 2026
Thisaigal NewsYouTube
எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்
தற்போதைய செய்திகள்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

Share:

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கசிவு ஏற்படுவதற்கான ஆறு முக்கிய காரணங்களை உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு கண்டறிந்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அமிர்சான் முகமட் அலி, உரிமம் பெற்ற விநியோகிப்பாளர்கள் செய்யும் முறைகேடுகள், மூன்றாம் தரப்பினரால் பொருட்கள் திசைதிருப்பப்படுவது மற்றும் நடுக்கடலில் எரிபொருட்களை சட்டவிரோதமாக மறுசுழற்சி செய்வது போன்ற உத்திகள் கையாளப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும், போலியான ஆவணங்கள் மூலம் கொள்முதல் அளவை மாற்றுவது, கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகப் பொருட்களைப் பதுக்குவது போன்ற செயல்களும் இக்கசிவுக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.

இவற்றைக் கட்டுப்படுத்த, சுத்திகரிப்பு நிலையங்கள் முதல் சில்லறை விற்பனை நிலையங்கள் வரை அனைத்து விநியோகச் சங்கிலிகளையும் 'டேஷ்போர்டு' மூலம் தினசரி கண்காணிக்கவும், களப்பணியாளர்களின் சோதனையைத் தீவிரப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அமைச்சர் அமிர்சான் உறுதி அளித்தார்.

Related News

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக... | Thisaigal News