Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்
தற்போதைய செய்திகள்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்

Share:

பினாங்கு மாநிலத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'முத்தியாரா வழித்தடமான' எல்ஆர்டி திட்டத்தின் மிக முக்கியக் கட்டுமான மையமான SBG எனப்படும் செக்மெண்டல் பாக்ஸ் கார்டர் தளம் தற்போது 90 விழுக்காடு நிறைவடைந்துள்ளது.

குலிம், சுங்கை உலார் பகுதியில் 38 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தளத்தை இன்று காலையில் பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், "மாநிலத்தின் முதல் எல்ஆர்டி திட்டத்தை விரைந்து முடிப்பதற்கான முனைப்புடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தளம் முழுமையாகத் தயாரானதும் கட்டுமானப் பணிகள் இன்னும் வேகமெடுக்கும்," என்று நம்பிக்கை தெரிவித்தார்.

எல்ஆர்டி தண்டவாள அமைப்பிற்காக சுமார் 8,800 தூண் துண்டுகள் இங்கு தயாரிக்கப்படவுள்ளன. இந்தத் தளத்தில் சுமார் 400 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். உச்சகட்ட உற்பத்தியின் போது மாதத்திற்கு 350 துண்டுகள் வரை தயாரிக்க முடியும்.

இங்கு தயாரிக்கப்படும் கான்கிரீட் துண்டுகள், இரவு நேரங்களில் கட்டுமான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு பொருத்தப்படும். இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் ஏற்படும் இடையூறுகள் வெகுவாகக் குறைக்கப்படும் என்று சாவ் கோன் இயாவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Related News

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம... | Thisaigal News