இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் மலேசியா, தனது இராணுவத்தை பாலஸ்தீனத்திற்கு அனுப்பி வைக்கப் போவதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவலை மலேசிய ஆயுதப்படை மறுத்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு லெபானானில் அமைதிகாக்கும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மலேசிய இராணுவ வீரர்களின் புறப்பாட்டை சித்தரிக்கும் பழைய காணொளியை பயன்படுத்தி, பாலஸ்தீனத்திற்கு மலேசிய இராணும் புறப்பட ஆயத்தமானதைப் போல சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டு வருவதாக அது தெளிவுபடுத்தியது.
அந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை என்று ஏ.தி.எம் எனப்படும் மலேசிய ஆயுதப்படை விளக்கம் தந்துள்ளது.








