Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர்  ஊராட்சி மன்றத் தேர்தல் குறித்த ஆய்வு: மார்ச் இறுதி வரை தொடரும் என ஹன்னா இயோ தகவல்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் ஊராட்சி மன்றத் தேர்தல் குறித்த ஆய்வு: மார்ச் இறுதி வரை தொடரும் என ஹன்னா இயோ தகவல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.23-

கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் ஊராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது குறித்த சாத்தியக் கூறுகள் பற்றி மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகம் மேற்கொண்டு வரும் ஆய்வு, இந்த ஆண்டு மார்ச் இறுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டரசு பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறுகையில், இந்த ஆய்வு இன்னும் நடைபெற்று வருவதாகவும், தற்போது வரை இதில் புதிய மாற்றங்கள் ஏதுமில்லை என்றும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் ஏற்கனவே பதிலளித்தது போல, இந்த ஆய்வு மார்ச் இறுதி வரை நீடிக்கும். கடந்த ஜனவரி 27-ஆம் தேதி இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஜனவரி 28-ல் கூட்டரசு பிரதேசத் துறையிடம் வழங்கப்பட்டது என்று ஹன்னா இயோ விளக்கினார்.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு