Oct 16, 2026
Thisaigal NewsYouTube

32 வயதான அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
32 வயதான அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்

நவ. 17-

துணை பிரதமர் Datuk Seri Fadillah Yusof பெயரைப் பயன்படுத்தி போலி கடிதங்களை அனுப்பியதாகக் கூறப்படும் ஒரு பாதுகாப்பு அதிகாரியை கைது செய்தது. 32 வயதான அந்த ஆடவர் Samarahan மாவட்ட அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்.

அரச மலேசியக் காவல் துறைத் தலைவர், Tan Sri Razarudin Husain இவ்விவகாரம் குறித்து தெரிவிக்கயில், தமது தரப்பு பெற்ப்பட்டப் புகாரின் அடிப்படையில் இந்தக் கைது நடந்தது என்று கூறினார். அந்த ஆடவர் வாயிலாக தமக்கு வேலை வாய்ப்பு கிடைத்ததாக புகாராளர் குறிப்பிடிருந்தார். அவர் புகாராளரை ஏமாற்றி, போலி நியமனக் கடிதத்தையும் அரசாங்க வீட்டு வசதி கோரிக்கை கடிதத்தையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த கடிதத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திய பிறகு, போலி என்று புகாராளர் கண்டறிந்தார். இதனால், அவர் காவல் துறையில் புகார் செய்தார்.

அந்த ஆடவர் கடந்த 2018 முதல் Samarahan மாவட்ட அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். விசாரணையின்போது, தனது நண்பர்களிடம் போலியான வேலை வாய்ப்பு கடிதங்களை வழங்கியதாக ஒப்புக்கொண்ட அந்த ஆடவர், தாம் பெற்ற அவர்களின் தனிப்பட்டத் தகவல் ஆவணங்களை அழித்து விட்டதாகவும் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வில்லை எனவும் தெரிவித்ததாக Tan Sri Razarudin குறிப்பிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற உள்ளது என்றார் அவர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →