Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பகாப் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிப்படைகளை அம்னோ முடுக்கிவிடவுள்ளது
தற்போதைய செய்திகள்

சுங்கை பகாப் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிப்படைகளை அம்னோ முடுக்கிவிடவுள்ளது

Share:

பினாங்கு, சுங்கை பகாப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றியை உறுதிபடுத்த, அம்னோ கட்சி அதன் அனைத்து தேர்தல் பணிப்படைகளையும் முடுக்கிவிடவுள்ளது.

நேற்றிரவு மெனரா டத்தோ ஓன்-னில் நடைபெற்ற அக்கட்சியின் தலைவர் டத்தோ செரி அஹ்மத் ஜாஹித் ஹமிடி தலைமையிலான உச்சமன்ற கூட்டத்தில், அம்முடிவு எடுக்கப்பட்டதாக, அம்னோ பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

சுங்கை பகாப் இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணியின் தேர்தல் பிரிவு இயக்குநராக டத்தோ செரி டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் கதிர், நடவடிக்கை பிரிவு இயக்குநராக, பினாங்கு அம்னோ தலைவர் டத்தோ மூசா ஷேக் ஃபட்ஜிர், வார் ரூம், தலைவராக டத்தூஸ்ரீ அஹ்மத் மஸ்லான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சுங்கை பகாப் இடைத்தேர்தலில், ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் பிகேஆர் கட்சியைச் சார்ந்த ஜோஹரி அரிஃபின் களமிறங்குகின்றார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்