Jul 30, 2026
Thisaigal NewsYouTube
ஒரு தம்பதியர் உட்பட நான்கு சமூக வளைத்தள பிரபலங்களின் / 20 வங்கி கணக்குகள் முடக்கம்
தற்போதைய செய்திகள்

ஒரு தம்பதியர் உட்பட நான்கு சமூக வளைத்தள பிரபலங்களின் / 20 வங்கி கணக்குகள் முடக்கம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 15 -

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக விளங்கும் ஒரு தம்பதியர் உட்பட நான்கு பேரின் 20 வங்கி கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM அதிரடியாக முடக்கியுள்ளது.

பொது மக்கள் வழங்கிய நன்கொடையை தவறாக பயன்படுத்தியது தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் அந்த நான்கு பிரபலங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

7 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி தொடர்பில் மொத்தம் 20 வங்கிக் கணக்குள் முடக்கப்பட்டுள்ளதாக SPRM வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஒரு தம்பதியர் உட்பட இந்த நால்வரும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக விளங்கி வருகின்றனர்.

சமூக வளைத் தளங்களில் தாங்கள் கொண்டுள்ள செல்வாக்கை சாதகமாக பயன்படுத்தி, இந்த நால்வரும் மக்களின் நலன் சார்ந்த பொது நோக்கத்திற்காக பணம் திரட்டப்படுவதாக பொது மக்களை நம்பவைத்துள்ளனர்.

இதன் மூலம் பொது மக்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட ஆயிரக் கணக்கான வெள்ளி பணத்தை அவர்கள் தங்களின் சொந்த உபயோகத்திற்காக முறைகேடான வழியில் பயன்படுத்தி உள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்