கோலாலம்பூர், ஜூலை.27-
நாளை திங்கள்கிழமை முதல் இரு நாட்கள் இந்தோனேசியாவுக்குப் பணிப் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம். இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோவுடன் 13வது ஆண்டுப் பேச்சு வார்த்த்கையில் பங்கேற்கும் இப்பயணம், இரு தலைவர்களுக்கும் இடையிலான இவ்வாண்டின் முதல் சந்திப்பாகும்.
இந்த உயர் மட்டப் பேச்சு வார்த்தை, வணிகம், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி எனப் பல துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தலைவர்களும் வட்டார, உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்கள், மேலும் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்படும். அன்வார் ஆசியான் செயலகத்திற்கும் வருகை புரிந்து, 2025ல் மலேசியாவின் ஆசியான் தலைமைப் பதவி குறித்த முக்கிய உரையை ஆற்றவுள்ளார்.








