2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள கைதிகளும், அவர்களின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பத்தினரும் தற்போது மனோரீதியாக அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்று மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாரான் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் சொஸ்மா கைதிகள் சமூகவியல் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர் என்ற ஓர் பிரச்சார இயக்கத்தை கோலாலம்பூரில் உள்ள சிலாங்கூர் சீன அசெம்பிலி மண்டபத்தில் இன்று தொடக்கி வைக்கப்பட்ட நிகழ்வில் சுவாராம் இதனை தெரிவித்துள்ளது.
தற்போது சொஸ்மா சட்டத்தின் கீழ் நீதிமன்ற விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளர். அவர்களை சார்ந்த குடும்பத்தினரும் மிகுந்த பொருளாதார சிரமத்தை எதிர்நோக்கியிருப்பதாக இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், விடுவிக்கப்பட் வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


