Dec 4, 2025
Thisaigal NewsYouTube
14 மாடியிலிருந்து கீழே விழுந்து மாது மரணம்
தற்போதைய செய்திகள்

14 மாடியிலிருந்து கீழே விழுந்து மாது மரணம்

Share:

செமினி, ஆகஸ்ட்.29-

48 வயது மாது ஒருவர் வீடமைப்புப் பகுதியின் 14 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார். இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் செமினியில் நிகழ்ந்தது.

அந்த மாது, 14 ஆவது மாடியிலிருந்து குதிப்பதற்கு முன்னதாக வீட்டின் பால்கனியில் அவர் அமர்ந்து கொண்டு, குதிப்பதற்கு தயாராகிக் கொண்டு இருந்ததையும், பின்னர் அங்கிருந்து குதித்ததையும் அந்த வீடமைப்புப் பகுதியின் பாதுகாவலர்கள் நேரில் பார்த்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மாலை 5.18 மணியளவில் போலீசார் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார்.

தலையிலும், உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான அந்த மாது சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

சவப் பரிசோதனைக்காக அந்த மாதுவின் உடல் காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வேளையில் மாதுவின் இறப்பை போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்படுள்ளதாக ஏசிபி நாஸ்ரோன் தெரிவித்தார்.

Related News