Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஒரு காவல் துறை அதிகாரி மீது விசாரணை மேற்கொண்டு வருகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒரு காவல் துறை அதிகாரி மீது விசாரணை மேற்கொண்டு வருகிறது

டிச.16-

கடந்த வெள்ளிக்கிழமை தலைநகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு பெண்ணுக்கு அநாகரிக - ஆபாச சைகை காட்டியதாகக் கூறப்படும் ஒரு காவல் துறை அதிகாரி மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், குடிமக்கள் பாதுகாப்புப் படையின் நேர்மை, கட்டொழுங்கு துறை இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

மேலும் விசாரணைக்கு உதவும் வகையில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்க வேண்டும் என்று காவல் துறைத் தலைவர் Tan Sri Razarudin Husain கேட்டுக்கொண்டார். அதேபோல், அதே அதிகாரியால் இதேபோன்ற சம்பவத்தை எதிர்கொண்ட வேறு ஏதேனும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், அவர்களும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை கவனமாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்படும் என்று பொதுமக்களுக்கு அவர் உறுதியளித்தார். குற்றவாளி எனக் கூறப்படும் காவல் துறை அதிகாரி தலைநகரில் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →