கோலாலம்பூர், டிசம்பர்.01-
வெப்ப மண்டல புயல் மையம் கொண்டு இருப்பது குறித்து மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா, ஒரு நினைவுறுத்தலை இன்று வெளியிட்டுள்ளது.
அந்த வெப்ப மண்டலப் புயல், 396 கிலோமீட்டர் தூரத்தில் வியட்நாம், துறைமுக நகரான Da Nang- கை நோக்கி நகர்வதாக இன்று காலை 11 மணியளவில் கண்டறியப்பட்டது என்று மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.
அந்த புயல், மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாக மெட்மலேசியாவின் வானிலை மற்றும் நில நடுக்க செயலாக்க மையம் தெரிவித்துள்ளது.
வெப்பமண்டலப் புயல் மலேசியாவில் மிக அருகாமையில் உள்ளது என்றால் சபா, கூடாட் ஆகும். அங்கிருந்து 1,036 கிலோமீட்டரில் அது மையம் கொண்டுள்ளது. இது மலேசியாவிற்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.








