Jul 29, 2026
Thisaigal NewsYouTube
குடும்பத்தினரை வெட்டுக்கத்தி முனையி மடக்கிய கொள்ளையர்கள்
தற்போதைய செய்திகள்

குடும்பத்தினரை வெட்டுக்கத்தி முனையி மடக்கிய கொள்ளையர்கள்

Share:

பாகான் டத்து ஜன.22
வீடு ஒன்றில் நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பல், வெட்டுக்கத்தியினால் அச்சுறுத்தியதைக் கண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரா, ஊத்தான் மெலிந்தாங் அருகில் சுங்ஙாய் புலாவ், பாரிட் 15 இல் உள்ள ஒரு வீட்டில் இன்று நடந்த இச்சம்பவத்தில் 69 மற்றும் 66 வயதுடைய ஒரு தம்பதியரும் அவர்களின் 39 வயது மகனும் உயிர் தப்பியுள்ளனர்.

அதிகாலை 4 மணியளவில் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளைக்கும்பல், தூக்கத்திலிருந்து அலறி அடித்துக்கெண்டு எழுந்த அந்த மூத்தத் தம்பதியரையும் அவர்களின் மகனையும் வெட்டுக்கத்தியின் கனையிலேயே அடித்ததுடன் கத்தி முனையில் மிரட்டியது அவர்களை பயத்தில் உறைய வைத்துள்ளதாக ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

அந்த மூவரின் கைகளையும் கட்டிய ஐவர் அடங்கிய கொள்ளைக்கும்பல் வீட்டிலிருந்து சுமார் 39 ஆயிரத்து 500 வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு