Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கோர​ப்படாத இ​பிஎப். பணம், சந்தாதாரர்களை தொடர்பு கொள்ள முயற்சி
தற்போதைய செய்திகள்

கோர​ப்படாத இ​பிஎப். பணம், சந்தாதாரர்களை தொடர்பு கொள்ள முயற்சி

Share:

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஃப், சந்தாதாரர்களின் இன்னும் கோரப்படாத இபிஃப் பணம் தொடர்பாக சம்பந்தப்படட சந்தாதாரர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறது. இபிஃப் பணம் கோரப்படாத 100 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய சந்தாதாரர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்களுடன் தொடர்பு கொள்ள தொழிலாளர் சேமநிதி வாரியம் முயற்சி செய்து வருகிறது. சந்தாதாரர்களின் அடையாள அட்டை எண் அல்லது சந்தாதாரர் உறுப்பினர் எண் ​மூலமாக கோரப்படாமல் இருக்கும் பணம் தொடர்பில் சந்தாதாரர்கள் அல்லது அவர்தம் வாரிசுதாரர்கள் இபிஃப் வாரிய அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு, கணக்கை சரிபார்த்து, பணத்தை கோர முடியும்.

ஒவ்வொரு சந்தாதாரரும் அல்லது அவரின் வாரிசுதாரர்கள் வரும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இபிஎப் பணத்தை கோருவதற்கு விண்ணப்பிக்கவில்லையென்றால் இபிஃப் பின் அந்த ​மீதப்பணம் பஹாகியான் பெஙுருசான் வாங் தாக் துந்துட்,ஜபாத்தான் அக்கௌன்டன் நெகாரா எனும் தேசிய கணக்காய்வுத்துறையின் கோரப்படாத பண நிர்வாகப்பிரிவில் சேர்க்கப்படும் என்று இபிஃப் வாரியம் ​இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News