Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கெப்போங்கில் இரு சகோதரிகள் கத்தியால் குத்தப்பட்டனர்; வெளிநாட்டவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கெப்போங்கில் இரு சகோதரிகள் கத்தியால் குத்தப்பட்டனர்; வெளிநாட்டவர் கைது

கோலாலம்பூர், கெப்போங்கில் இன்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்த வெளிநாட்டவர் ஒருவர், இரு சகோதரிகளை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.

செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் பக்ரி சாலாம் கூறுகையில், தாமான் ஸ்ரீ பிந்தாங்கில் உள்ள வீட்டுக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்ததாக அதிகாலை 5.04 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், வீட்டுக்கு வெளியே தீக்காயத் தடயங்களையும், 18 மற்றும் 21 வயதுடைய இரு சகோதரிகள் கீழ்தளக் கழிவறையில் மறைந்திருந்ததையும் கண்டனர்.

மேல்தளத்துக்குச் சென்றபோது, சந்தேக நபர் அறைக்குள் கத்தியுடன் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், சகோதரிகளில் ஒருவர் தனது முன்னாள் காதலருடன் தொடர்பு கொண்டதால் ஏற்பட்ட பொறாமையே சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அனுவார் பக்ரி சாலாம் தெரிவித்தார்.

காயமடைந்த இரு சகோதரிகளும் சந்தேக நபரும் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 326 மற்றும் 435-ஆவது பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →