Oct 18, 2026
Thisaigal NewsYouTube

வழிப்பறி கொள்ளையில் மூதாட்டி காயம்)

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வழிப்பறி கொள்ளையில் மூதாட்டி காயம்)

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 07-

கோலாலம்பூர், பங்சார், ஜாலான் லிமாவ் மானிஸ்-ஸில் இன்று காலை 6.30 மணியளவில் நிகழ்ந்த வழிப்பறி கொள்ளைச்சம்பவத்தில் 78 வயது மூதாட்டி ஒருவர் காயத்திற்கு ஆளாகினார்.

கடையை நோக்கி நடந்து சென்ற அந்த மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறிக்கொள்ளையன், அவரின் கைப்பையை பறித்துச்சென்றுள்ளார்.

தோளில் மாட்டப்பட்டிருந்த கைப்பையை பறிக்கும் போது அந்த மாதுவும் தடுமாறி கீழே விழுந்து மோட்டார் சைக்கிளுடன் சில அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

முழங்கால் முட்டி, தோள்பட்டை, கைகளில் கடும் காயங்களுக்கு ஆளான அந்த மூதாட்டி மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் கு மஷாரிமான் கு மஹ்மூத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →