Oct 17, 2026
Thisaigal NewsYouTube

TVET கல்வியின் அவசியத்தின் விளக்கவுரையும் கூட்டு வழிபாடும் நடைபெற்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
TVET கல்வியின் அவசியத்தின் விளக்கவுரையும் கூட்டு வழிபாடும் நடைபெற்றது

நவம்பர்- 10

கடந்த வெள்ளிக்கிழமை, தம்பின் ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கான தொழில்திறன் TVET கல்வியின் அவசியத்தின் விளக்கவுரையும் கூட்டு வழிபாடும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமாகிய மாண்புமிகு வீரப்பன் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

தம்பின் பகுதியிலுள்ள துங்கு பெசார் இடைநிலைப்பள்ளி, தாமான் இண்டா இடைநிலைப்பள்ளி மற்றும் சைட் இட்ரூஸ் இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் ஐந்தாம் படிவம் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களும் 20க்கும் அதிகமான பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

இந்திய மாணவர்களிடையே தொழில்திறன் கல்வியின் அவசியத்தையும் நாட்டில் தொழில்திறன் வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் பல சான்றுகளுடன் அந்த நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது.

கலந்து கொண்ட மாணவர்கள் தொழிற்கல்வியால் கிடைக்கப்பெறும் வாய்ப்பினை நன்லு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வீரப்பன் கேட்டுக் கொண்டார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →