Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கடினமான முடிவுகளை துணிவுடன் எடுத்ததன் பயனாக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு- ரபிஸி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடினமான முடிவுகளை துணிவுடன் எடுத்ததன் பயனாக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு- ரபிஸி

ஷா ஆலம், அக்டோபர் 02-

பொருத்தமான விரிவாக்க நடவடிக்கை மற்றும்
கடினமான முடிவுகளை அமல்படுத்தும் தைரியம் ஆகியவை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு கண்டு உலகிலேயே சிறப்பான அடை நிலையைப் பதிவு செய்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியது என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி கூறினார்.

ரிங்கிட்டின் மதிப்பை உயர்த்துவதில் அனைத்து தரப்பினரும் கவனம்
செலுத்தினால் 13வது மலேசியத் திட்டத்தின் கீழ் மலேசியாவை
மேம்பாடடைந்த நாடாக உருவாக்குவதற்குரிய வாய்ப்புள்ளதாக என்று
அவர் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் தொடங்கி நமது பங்கு சந்தையில் நிதி ஓட்டத்தை நாம் கண்டு வந்தோம். பொருத்தமான விரிவாக்கத்தை தயார்படுத்தியது மற்றும் கடினமான முடிவுகளை எடுத்தது ஆகியவை அதற்கான காரணங்களில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

சவால்கள் அல்லது விமர்சனங்களுக்கு மத்தியிலும் சரியான ஒன்றை நாம் தொடர்ந்து செய்தால் மற்றும் பிறரை இங்கு ஈர்க்கக் கூடிய போட்டியிடும் ஆற்றலின் கூடுதல் சாதகம் மீது கவனம் செலுத்தினால் நாம் எதிர்பாராமல் நடக்கக்கூடிய வெளிப்புற நிகழ்வுகளைச் சமாளிக்க இயலும் என்று ரஃபிஸி ரம்லி கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →